![]() |
www.thaalee.com This is the one and only popular and pioneer website for the Sri Lankan Nation residing all over the world, providing Astrological Prediction, Consultation, Mediation and Match-Making. |
![]() |
சூரியன் - இவர் தகப்பன் வழி ,சரீரம் சம்பந்தமானவர். சிவனை வணங்கினால் இவர் நன்மை செய்வார்.
சனீஸ்வரன்- இவர் ஆயுள், நீதி ,எலும்பு ,இரும்பு, Hardware, சொத்துபத்து , வாகனம் , கமத்தொழில், Factory , Production , Engineering , Architect , Building Contraction , Surveying போன்ற இன்னோரன்ன துறைகளுக்கு பொறுப்பானவர். இவர் Slow and steady ஆனவர்.
ராகு-இவர் கண்ணுக்கு புலப்படாதவர்.கெடுதி செய்வதில் வல்லவர். இவர் யோகமான இடங்களில் இருந்தால் திடீர் நன்மைகளை செய்யக்கூடியவர். காளியம்மன் வழிபாடு செய்வதால் ராகு மூலமான நன்மைகளை பெறலாம் .
சந்திரன்- இவர் மாதுருகாரகன் ஆவார்.இவர் தாய்வழி சம்பந்தமானவர். இவர் பார்வதி சொரூபமானவர். இவரை மதி , இந்து , திங்கள் சசி , இதுபோன்ற நாமங்களால் அர்ச்சனை செய்யலாம்.
புதன் - இவரே கல்வி , கணக்கு , வியாபாரம் , வித்தை , ஞாபக சக்தி , தாய்மாமன் போன்றவற்றிற்கு பொறுப்பானவர். புதன் 1ல் இருப்பது மிகவும் நன்மை தரும்.மரகதத்தை அணிவதால் புதனுடைய கிருபையை பெறலாம்.
செவ்வாய் - பூமி லாபம், பூமி சேர்க்கை ,விவசாயம் , பொறியியல், மரவியாபாரம் , மற்றும் நிர்மாணத்துறை பணிகள், ஒடு, செங்கட்டி மட்பாண்ட (Hardware) வியாபாரம், இரத்த அழுத்தம் , கோபம வைராக்கியம் , மாங்கல்யம் என்பவற்றிட்கு பொறுப்பானவர்.
கேது- இவர் ஞானகாரகன் ஆவார். கால், செங்கிரந்தி , ஞானம் , மூளைக்கோளாறு , பித்தம் இவற்றிக்கு பொறுப்பானவர். பொதுவாக தீமைகளை பண்ணக்கூடியவர் . ஆகவே அம்மனை வழிபடுவதால் இவருடைய தோஷங்கள் நீங்கப்பெறும் .
வியாழன் - இவர் புத்திரன் , பூர்வபுண்ணியபலன் , செல்வம் , சகலவித சௌபாக்கியம், உடம்பு என்பவற்றிட்கு பொறுப்பானவர். இவர் தட்சணாமூர்த்தி சொருபமானவர். இவர் இப்பிறவிக்கும் மறு பிறவிக்கும் அருள் செய்யக்கூடியவர்.