www.thaalee.com

This is the one and only popular and pioneer website for the Sri Lankan Nation residing all over the world, providing Astrological Prediction, Consultation, Mediation and Match-Making.
Name சூரியன் - இவர் தகப்பன் வழி ,சரீரம் சம்பந்தமானவர். சிவனை வணங்கினால் இவர் நன்மை செய்வார்.
Description மாணிக்கம் ( Ruby ) இதுவே சூரியனுக்குரிய அதிஷ்ட நவரத்தினம் ஆகும். 1, 10, 19, 28 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் மாணிக்கத்தை அணியலாம். ஜாதகத்தில் 1, 2, 4, 7 ,8,12 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷம் எனப்படும். சூரியன் 1, 7, 8 ஆகிய இடங்களில் இருப்பது மிகவும் பாதகமான தோஷம் ஆகும். இப்படி யாருக்காவது இருந்தால் அவர்கள் மோதிரவிரலில் ( Ruby ) கல்லு பதித்த மோதிரம் அணிய வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் தலை குளித்து சிவந்த நிற பூ வைத்து சூரிய பகவானை நமஸ்காரம் பண்ண வேண்டும்.இப்படி செய்வதால் சரீர புஷ்டி,வசீகரம், தலைமைத்துவம் , ராஜசன்மானம், ராஜ சேவை, முதுசம் என்பன சிறக்கும். திருமணத்தில் உள்ள தடைகள் நீங்கும். பொதுவாக Ruby கல் அணிவதால் சகலதும் சிறப்படையும்.